இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

  உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது .   (2 கொரிந்தியர் 4: 14-18) கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம் .   தேவனுடையமகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது .   ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை ; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும் , உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது .   மேலும் காணப்படுகிறவைகளையல்ல , காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது .   ஏனெனில் , காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் , காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் . " கர்த்தராகிய இயேசுவின் மரணத்தை உடலில் தாங்குதல் " என்பது புனிதர்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டார்கள் என்பதாகும் . இருப்பினும் , அந்த மரணத்திற்குப் பிறகு வரும் இயேச...